இந்தச் சிப்பிக்குள் பால்ய வயதில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு..........

கதியோட வந்த நதி வாழ்க்கையைப் பறி கொடுத்தவர்களுக்காக இவன் வாதாடுகிறான். முகவரிகளைத் தொலைத்தவர்களை இவன் முறைத்துப் பார்க்கிறான் .....கவிவேந்தர் முமேத்தாவின் முன்னுரையிலிருந்து
.

நந்தவனத்து நட்சத்திரங்கள் காற்று,கவிதை, காதல் இம்மூன்றும் பரிசத்தமான பாத்திரங்கள் ஜலதரங்கத்தின் பாத்திரவாயில் படும் அடிநீர் அதிரிவுகளை எழுப்பி இசையாகி விடுவது மாதிரி, சுற்றுப்புற நிகழ்வுகளின் சிதறும் பொறி பலத்த அதிர்வுகளாய் பரிமாணம் பெற்று இந்த பக்கங்களில் பதிப்பாகி இருக்கின்றன.

........................................................................

நிழலில் கிடைத்த நிம்மதி

இவர் கவிதைகளில் ஆழ்ந்த கருத்துக்களும் அழகிய சொற்களும். சிறந்த கற்பனை வளமும் நிறைந்து காணப்படுவது பாராட்டிற்குரியதாகும்.

.

மொழிப்பற்று, இனப்பற்று, இயற்கை, காதல் போன்ற பல்வேறு பொருள்களிலும் பாடியுள்ள இவர், ஒரு சிறந்த கவிஞராக எதிர்காலத்தில் விளங்குவதற்கான அடையாளங்களை இவர்தம் கவிதைகளில் காண முடிகிறது.
........................................................................

ஒரு தூரிகை துப்பாக்கியாகிறது

கவிஞர்களும், கவிதைகளும் ஏராளமாய்ப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் காலம்தான் இதுவென்றாலும்.இந்தக் கவிதைத் தொகுப்பை கூட்டத்தோடு கூட்டமாய், பத்தோடு பதினொன்றாய்த் தூக்கி எறிந்துவிட முடியாது
.
என்ன சொல்கிறோம் என்பதைப் போலவே அதை எப்படிச் சொல்கிறோம் என்பது கவிதையின் முகாமையான சிறப்புகளில் ஒன்று! அந்தச் சிறப்பு இந்தத் தொகுதியில் நிறைவாகவே உள்ளது.
.
சுப.வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையிலிருந்து
........................................................................

உடைந்த நிலாக்கள் (பாகம் ஒன்று)

பாக்கியா வார இதழில் பல வாரங்களாக இவரெழுதிய கவிதை வரலாற்றை வரலாற்றுக் கவிதையைப் படித்தேன் முழுவதுமாய்!
.

சுரித்திர காலங்களில் கால் வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப்பயணம் செய்தது போலிருந்தது. மறைந்துபோன,மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல் முறை என எண்ணுகிறேன்.

.
உவமைக் கவிஞர் சுரதாவின் அணிந்துரையிலிருந்து
........................................................................
வானவில் ப +ங்கா

பாக்யா வார இதழில் தொடராக வெளிவந்த வசன கவிதைகளின் தொகுப்பு!

விதியை நம்புகிறவர்கள் 
நோய்வாய்ப் பட்டவர்களே!
ஏன் என்றால் 
விதி என்பது வியாதி!

.
தீ தன்னை
தீயென்று
நினைக்காவிட்டால்
விட்டில் ப+ச்சி
அதன் மீது
எச்சில் துப்பிப் போகும்
இவை போன்ற எண்ணங்களால் நெய்யப்பட்ட வண்ணக் கவிதைகள் பல்வேறு தலைப்புகளில்!
........................................................................
உடைந்த நிலாக்கள் (பாகம் -2)
சரித்திரத்தில் காட்டப்படாத காதலின் வேர் முனையில் இருந்து வழியும் நிஜத்தின் தேன்! காலத்தின் திரையில் மறைக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செவி வழி கேட்ட செய்திகளின் பதிவு!
........................................................................
சில்மிஷியே (காதல் கவிதைகள்)
காதலின் மெல்லிய உணர்வுகளைச் சொல்லும் கவிதைத் தொகுப்பு!

நீ 
கனவில் வந்த போதுதான் 
எனக்கு
காரணம் புரிந்தது!

நீ 
கனவாய் போன போதுதான்
எனக்கு
கண்ணீர் இருப்பதற்கான 
காரணமும் புரிந்தது!
........................................................................
உடைந்த நிலாக்கள் (பாகம்-3)

உடைந்த நிலாக்கள் மூன்றாம் பாகத்தின் களம் விசாலமானது. சற்றே வியப்பானது! கிளியோபட்ரா என்னும் உலகப் பேரழகியின் வெளிச்சத்திற்கு வராத அந்தரங்க வாழ்க்கையின் அப+ர்வமான தகவல்களும்- சம்பவங்களும் - காட்சிகளும்-கற்பனை கலந்த நெசவில் இலேசான அந்த மழை போன்ற கவிதை நடையில் ரோமபுரியில் காதல் தேவதை” என்ற தலைப்பில் தேவி வார இதழில் தொடராக வெளிவந்தது.

........................................................................
காற்சிலம்பு ஓசையிலே (பாகம் - 1)
சிலம்பைச் சின்ன சின்ன வார்த்தைகளில் சிறைப்படுத்தியிருப்பதும்;;: உரைநடைக் கவிதைகளுக்கு உரித்தான உத்திகளான – உவமை,உருவகம், உள்ளீடு ஆகிய மூன்றையும் நவீனப்படுத்தி ஆங்காங்கு நிரவியிருப்பதும் வலிய வைக்காமல் இயைபுத் தொடையை இயல்பாகக் கையாண்டிருப்பதும் இந்நூலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைச் சுட்டுகின்றன.
........................................................................
காற்சிலம்பு ஓசையிலே
சிலப்பதிகாரக் கதையைப் புதிய கவிதை வடிவத்தில் கூறும் கவிஞர் பா.விஜய் அவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தேவைக்கு ஏற்றவாறும் அதனைக் கூறுகிறார். படிக்கப்படிக்க சுவை குன்றாமல் கதை நடை போடுகிறது. கருத்துக்களின் வளம் பொதிந்து கிடக்கின்ற தங்கச் சுரங்கமாகவும் இது திகழ்கிறது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் மு.திருமலை அவர்களின் ஆய்வுரையிலிருந்து.
........................................................................
 நம்பிக்கையுடன்
மரங்கள் காற்றைச் 
சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை
சுத்தம் செய்கிறது 
-------------------
கர்வம் வை 
கிராம்; கணக்கில்!
நம்பிக்கை வை 
கிலோ கணக்கில்!

நகம்கூட
நாளுக்கு
.001 அங்குலம்
வளர்கின்றது
நாம்?

போன்ற நம்பிக்கைத்துவமான வரிகளின் புதையலே இப்புத்தகம்!
........................................................................
கண்ணாடி கல்வெட்டுக்கள்
மக்கள் செய்த சரித்திரங்களுக்கு எந்த ஆதாரப்ப+ர்வமான செப்பேடுகளும் பனை ஓலை பழஞ்சுவடிகளும், பழைய கல்வெட்டு வாசகங்களும இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த அக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்தத் தொடரின் சாரம்!
........................................................................
பா.விஜய் பாடல்கள் (பாகம் - 1) திரைப்படப் பாடல்கள் அடங்கிய தொகுதி
பா.விஜய் பாடல்கள் (பாகம் -2) திரைப்படப் பாடல்கள் அடங்கிய தொகுதி
.......................................................................
உடைந்த நிலாக்கள் (பகுதி - 1) ஒலிநாடா 
   
உடைந்த நிலாக்கள் பாகம் ஒன்றில் இருக்கும் பிரபலமான வசன கவிதைகளின் ஒலி வடிவம். புரபல பாடகர்களின் ஒலியில்
........................................................................
பா.விஜய் கவிதைகள் ஒலிநாடா
இயக்குநர் பாரதிராஜா, நடிகர் பார்த்திபன், சத்தியராஜ், சரத்குமார் மற்றும் கவிஞர் பா.விஜய் போன்ற பிரபலங்களின் குரலில் வரி வடிவத்தில் வந்த வித்தகக் கவிஞர் பா.விஜய் எழுதிய பிரபலமான கவிதைகளின் ஒலி வடிவம்!
............................................................
வினாயகர் சரஸ்வதி ஸ்துதி ஒலிநாடா
...........................................................
கடவுள் வருகிறான் ஜாக்கிரதை
கடவுள் ப+மியில் மனிதனாய் பிறந்தால் என்ற கற்பனையின் கரு இப்புத்தகத்தில் இது குங்குமத்தில் வெளிவந்த கவிதைத் தொடர்
..........................................................
காதல் @ காதலிகள்.காம்
குங்குமம் வார இதழில் தேவதைகளின் தேசம் என்னும் தலைப்பில் எழுதிய பல்வேறு கவிதைகளின் தொகுப்பு
..........................................................
பெண்கள் பண்டிகை 
காதல் கவிதைகளின் தொகுப்பு 

உலகம் காற்றடைத்த பைதானென்றால் 
காதல் தானே அதில் காற்று!
தியானமும், தவமும் தேடும் பரம்பொருள் 
காதல் என்றே நீ சாற்று!
----------------

அவள் 
ஜன்னல் கம்பிகளில் 
கன்னம் தேய்த்தாள் …

ஜன்னல் கம்பிகளுக்கு
தங்கமுலாம்
ப+சிக் கொண்டு இருக்கிறாளோ என்று
நினைத்தேன் நான்!
.........................................................
இரண்டடுக்கு ஆகாயம் 

புன்னகைக்கு
தொட்டிலாக இருக்கும் 
உங்கள் உதடுகள்தான் 
புன்னகைக்கு
சுமாதியாகவும் இருக்கிறது 

புன்னகை என்பது 
உலகப் பொதுமறை~

ஊமைகளால் கூட
பேச முடிந்த ஒரு 
மோழி 
புன்னகை அல்லவா~

போன்ற யதார்த்த வரிகளின் வார்ப்பு இப்புத்தகத்தின் ஒவ்வொரு கவிதைகளிலும் பதிவாகியிருக்கிறது.
.........................................................
ஜஸ்கட்டி அழகி 

அவள் எப்படி வேண்டுமானாலும் 
பார்க்கட்டும் 
ஆனால் அவள் பார்க்காதிருந்து விடுவாளோ 
என்பது பயம் 

எல்லா பார்வையும் ஆயதமே!
வௌவேறு வடிவ ஆயுதங்கள்!

ஓன்று வாள்!
ஓன்று துப்பாக்கி!
ஓன்று விஷ ஊசி 

இப்படியாய் பல்வேறு காதல் கவிதைகள்!
.........................................................
காகித மரங்கள்
பத்திரிக்கையில் வெளிவந்த கவிதைகளின் தொகுப்பு
.........................................................
கைதட்டல் ஞாபங்கள்
கவியரங்கில் இடம்பெற்ற வித்தகக் கவிஞரின் கவிதைகள்!
.........................................................
இரு நாவல்கள்
போர்புறா, வாழ்க்கைத் தேடி வானம்பாடிகள் 
இரண்டு சமூக நாவல்களின் தொகுப்பு
........................................................
அடுத்த அக்னி பிரவேசம்
........................................................
18 வயசுல 
கொலுசு உன் கால்களோடு 
போய்விட்டது!
சத்தம் மட்டும் என் காதுகளோடே
வருகிறது!
-------------

பாட்டிக்காக வெற்றிலை இடித்துத் தருகிறாயே
எனக்கா
வெட்கத்தை மடித்துத் தருவாயா?
--------------
நறுக்கென்று நெஞ்சத்தில் ப+வாய் தைக்கும் குறுங்கவிதைகளின் தொகுப்பு
........................................................
அரண்மனை ரகசியங்கள்

ஆழ்கடலுக்குள் சென்று முத்தெடுத்து வந்துவிடலாம். ஆதைவிடக் கடினமானது ஒரு வரலாற்று நாவலை நேர்த்தியாகப் படைப்பது. வரலாறும் இலக்கியச் சுவையும் தண்டவாளங்கள் போல நேராகவும் சீராகவும் இருக்க வேண்டும். வுரலாறு அதிகமானால் பாடப்புத்தகம் போலாகிவிடும். இலக்கியச் சுவை கூடுதலானால் கற்பனைக் கதையாக மாறிவிடும். வரலாற்று நாவல் எழுதுவதென்பது விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது என்கிற பழமொழிக்கு ஈடானது. அத்தகைய ஒரு சுவாலான பணியை வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு நக்கீரன் மூலமாக வாசகர்களைச் சந்தித்தார் கவிஞர் பா.விஜய்.

நாவலனின் ஏதேனும் ஒரு இடத்தில் வருகின்ற கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் முழுவரலாற்றுப் பின்னணியையும் தேடித் தொகுத்த பிறகே கதாபாத்திரமாக்கினார். அரண்மனை ரகசியம் என்கிற பிரம்மாண்டம் உருவானது.

தமிழில் வெளியாகியுள்ள புகழ்மிக்க வரலாற்று நாவல்களின் வரிசையில் அரண்மனை ரகசியம் என்கிற இந்த பெருநாவலும் பெருநாவலுக்கும் நிச்சயம் இடம் உண்டு என்ற நம்பிக்கையுடனும் பெருமையுடனும் நக்கீரன் இதனை வெளியிடுகிறது. நக்கீரன் கோபால் அவர்களின் பதிப்புரையிலிருந்து.

........................................................
 

 

All rights © reserved 2008-2009 by PA VIJAY.COM : Site Conceptualized, designed & maintained by Yellowwin Media : Thaalam Satellite Tamil Broadcasting