ஏ.பி.ஜே. அப்துல்கலாம்

24.08.2004 அன்று இந்திய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து 30 நிமிடங்கள் கவிதை, திரைப்பாட்டு, இலக்கியம் பற்றி உரையாடியது.

2004ஆம் ஆண்டிற்கான தேசிய விருது ஒவ்வொரு ப+க்களுமே பாடலுக்காகப் பெற்றது

முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி

காப்பியக் கவிஞர் வாலி

என் பாசத் தம்பியே!
பா.விஜய் எனும் பாட்டுத் தம்பியே!
வித்தககக் கவிஞனே!
வெற்றிமீது வெற்றிவந்தும் மமதையில் மதநீர் சுரக்காத மத்தகக் கவிஞனே!

உன் பத்து நூல்களையும் படித்தேன்! காணாமல் போன என் இளமையைக் 
கண்டு பிடித்தேன்!
காதல் ததும்பும் உன் கவிதைகளை வரிவிடாது வாசித்தேன். என்ன ஆனேன்?
வாலியாய் இருந்த நான் வாலி-பன் ஆனோன்!

விஜய் உன் கவிதை வாலிபருக்கு நாயகரர்;: வயோதிகருக்கு வயாகரா!
சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய் என்று இப்போது அறிவிக்கிறேன்


இயக்குநர் கே.பாக்யராஜ்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பா.விஜய் இளம் வயதுக்காரர். ஆனால் வளமான வார்த்தை வித்தகர் இவர் பாக்யாவில் தொடர் எழுத வேண்டும் என கேட்ட போது, என்ன எழுதப் போகிறாய்? என்று கேட்டேன். தாஜ்மஹாலின் மாதிரிப்படம் எப்படி வந்தது என்று அவர் விளக்கியபோது காலம் காலமாக காதலின் சின்னமாக நெஞ்சில் நின்ற தாஜ்மஹால் மறந்து போய், கணவனுக்காக உயிர்த்தியாகம் செய்த அந்த ஓவியனின் மனைவி கண்களைக் குளமாக்கி குடிகொண்டு விட்டாள்.

இப்படி ஒரு உருக்கத்தை இத்தனைகாலம் தெரிந்து கொள்ளாமல் இருந்தது. கொஞ்சம் கூச்சத்தை உண்டு பண்ணியது என்றால், விஜய் அடுத்தடுத்து நீரோ, கஜினி, பிரிதிவிராஜன், சரபோஜி மகாராஜா இவர்களைப் பற்றிக் கூறியது ஒவ்வொன்றும் பிரம்மிப்ப+ட்டுவதாக இருந்தது. மிகமிக சிரமப்பட்டு இவ்வளவு அரிய விஷயங்களை சேகரித்தற்கே விஜய்க்கு கிரீடம் சூட்டலாமென்றால் அவர் எழுதிய கவிதை நடைக்கு?

அதையும் தாண்டி எப்படிச் சிறப்பிப்பது? என இன்னும் முடிவுக்கு வராமல் சிந்தித்தபடியே உள்ளேன்.

சாலமன் பாப்பையா 

அநேகமாக கவிஞர்கள் வாங்கிப் பழக்கப்பட்டவர். நானறிந்த மட்டிலே ஒரு கவிஞன் இன்னொரு கவிஞனுக்கு, ஆளப் பிறந்த ஒரு அரச குமாரனுக்கு எப்படி பரிசு தரவேண்டும் என்று சொல்லி, அரங்கத்திலே இதுவரை மன்னர்கள் கவிஞர்களுக்கு முடிசூட்டியதுண்டு ஆனால் ஒரு கவிஞன் ஒரு கவிஞனுக்கு மன்னனுக்கு முடிசூட்டிய முதல் காட்சி. இதுதான் வரலாறு என்பது நானறிந்த மட்டில் சரித்திரம் சொல்கின்ற சாதனை!

கவிக்கோ அப்துல் ரகுமான்

     புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
     மான் புலியை வேட்டைத்தான் ஆடும் இடம் கட்டில்!


இது மாதிரி வரிகளை முன்பு நாங்கள் சினிமாவில் பாடல்களில் கேட்டதில்லை.இப்பொழுது இதைமாதிரி நல்ல வரிகளை பா.விஜய் போன்ற இளைஞர்கள் நிறைய எழுதுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் மிக உயர்ந்த காவிய வர்ணணைகளை இவரின் புத்தகத்தில் பார்த்து வியந்தேன்.

பத்து புத்தகம்! ரொம்ப கடினமான வேலைங்க! நாங்கெல்லாம் பத்து மாசம் கழிச்சு ஒருபுள்ள, பத்து வருஷம் கழிச்சு ஒரு புத்தகம் எழுதுற ஆட்களெல்லாம் இருக்குறாங்க, இவர் 10 புத்தகத்தை இவ்வளவு விரைவாக கொடுக்கிறார்ன்னா. அவ்வளவு விஷயம் உள்ள இருக்குன்னு அர்த்தம்!

 
 

 

All rights © reserved 2008-2009 by PA VIJAY.COM : Site Conceptualized, designed & maintained by Yellowwin Media : Thaalam Satellite Tamil Broadcasting